GOOGLE

Friday, June 26, 2015

காக்கா முட்டை - வேகாத கூமுட்டைகளுக்கு(தமிழ் ஸ்டார்ஸ்) சாட்டையடி



நேற்று காக்கா முட்டை படம் பார்த்தேன் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஏன் இப்போதுதான் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது இருபினும் இதுவரை நடிகன், நடிகன் என்று கோடிகளில் புரளும் இன்றைய தல, தளபதி, அந்த ஸ்டார் , இந்த ஸ்டார் , நொந்த ஸ்டார், நோவாத ஸ்டார், ஊறுகாய் ஸ்டார் , டாஸ்மாக் ஸ்டார்ட் என இவர்களின் நடிப்பை காக்கா முட்டை பையன்களின் நடிப்புடன் ஒப்பிடும்போது இந்த ஸ்டார்களின் படத்தை நேரம் வீணாக்கி பார்த்ததில் வெட்கபடுகிறேன்

ஏய்...ஊய்...காய்... என தோரணைக்கு ஒரு துணியும் தொடை காட்டும் நடிகையும் 90 கோடியில் ஒரு படமும் ஒரு காதல், ஒரு ஜாதி, ஒரு அரசியல், ஒரு போலிஸ் , ஒரு திருடன் என வேடமேட்டு பெச்சிடுக்குள் நடிப்பதை திரையில் நடித்து அனைத்து மக்களின் பணத்தை , நேரத்தை சுரண்டும் இந்த மானம்கெட்ட கூத்தாடிகள் நடிகன் என்று சொல்ல வேண்டுமானால் இந்த காக்கா முட்டை பையன்களிடமிருந்து நடிப்பை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.ம்..ம் ... அது முடியாது. நாம் நடிப்பது நடிப்பு என்றால் பூனைகூட பொடகாலிபக்கம் போய்தான் சிரிக்கும். உங்கள் நடிப்பை நாய் பிஸ்கட் விற்பனை , ஈமுகோழி விற்பனை, பாவாடை துவைக்கும் சோப்பு, பூச்சி மருந்து இதற்கு மட்டுமே பொருத்தமானவை

காசு கொடுதால்போதும் கக்கூசு மருந்து விளம்பரத்திலும் நடிக்கும் இந்த ஸ்டார்கள் இந்த காக்கா முட்டை பையன்களிடமிருந்து நடிப்பை கற்றுக்கொள்ளுங்கள் அப்பவும் நடிப்பு வரவில்லை எனில் அவர்களில் காலை கழுவி குடியுங்கள் அப்போதாவது நடிப்பு வருகிறதா என பார்போம்.


Thursday, June 18, 2015

பணமாக்கப்படும் தமிழ் தேசியம்

பணமாக்கப்படும் தமிழ் தேசியம்

தேசியம் என்பது என்ன ? அதில் தமிழ் எப்படி ஒட்டிக்கொண்டது. இது தமிழ் மொழிக்கான தேசியமா? தமிழலுக்கான தேசியமா. தமிழலுக்கான தேசியம் என்றால் தமிழ் மொழியையும் பேசும் ஏனைய மொழித்தவர் தேசியம் இல்லாதவர்களா?

தேசியம் தேசியம் என்று எங்கு நின்றுகொண்டு பேசுகிறோம் , தேசமில்லாத ஒரு காட்டில்லா? நேசமற்ற நாட்டிலா, தேசியத்தில் பாசமற்ற மானுடதில்லா? இப்படி எண்ணற்ற கேள்விகள் கேட்டாலும் விடை கிடைக்க போவதில்லை ஏனனில் தேசியம் என்பது எவரும் அறியாதவை அல்லது தனக்கு சாதகமான சூழ்நிலைக்காக தனக்கு சாதகமான சுக வாழக்கைகாக தேசியம் என்ற சொல்லை மேடையில் முக்கி மன்னிக்கவும் முழங்கி தமிழனின் புத்தியை , உணர்வை , சுய சிந்தனையை, சுய உணர்ச்சியை காசாக்கி விஷ மரம்போல் எம் தமிழ் இனத்தில் வேகமாக வளரும் கருவேல மரங்கள் இவர்கள்

எம் தமிழ் இனத்திற்கு தேசியம் பிறகு பெற்று தாருங்கள் , முதலில் எம் தேசியத்திற்கு காசு இல்லா கல்வி பெற , விலை இல்லா மருத்துவம் பெற டாலர் இல்லா குடிநீர் பெற, தற்கொலை இல்லா விவசாய மானிடன் வாழ ஒரு தமிழ் நாடு தாருங்கள். தமிழ் தேசியம் பேசி எம் தமிழ் இனத்தை விலைபொருளாக்கி அதில் கிடைக்கு காசில் தன் குடும்பத்திற்கு வீணை வாங்கி வாசித்து மகிழும் நாதாரிகள்தான் தமிழ் தேசியம் பற்றி வாய்கிழியப் பேசுகின்றனர். இதில் வந்தேறிகள்தான் அதிகம் மலேசியாவில் மலையாளி பெண்ணுடன் சுத்திவிட்டு என் நாட்டில் தமிழ் தேசியம் பேசும் பெருசாளிகள் பெரும் பணத்தில் கொழிகின்றனர்.

99 சதவீத மக்களை மூன்று வேலை வயிய்று பசி உணவுக்கே வழியில்லாமல் வைத்துக்கொண்டு எவனுக்கடா தேசியம் பெற்று தருகின்றிர்கள்? தமிழ் தேசியம் பேசி கொழுத்தது நீங்களாக இருக்கலாம் எம் தமிழ் இனம் சத்தியாமாக இல்லை பெருந்தலைவர் காமராசரும், அய்யா கக்கன் போன்றோரும் ஏழைகளாகவே வாழ்ந்து ஏழைகளுக்காக கல்வி அளித்து, ஏழைகளுக்காக உணவழித்து, ஏழைகளுக்காக மருந்தளித்து, ஏழைகளுக்காக விவசாய செளிப்படையச் செய்து தமிழ் தேசியம் காத்த பெரும்தலைவர்கள்

தேசியம் என்பதை வெளியில் தேடமுடியாது , யாரிடமும் போராடியும் பெறமுடியாது நமக்காக போராட எந்த தலைவனும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இல்லை, அப்படி இருப்பினும் காட்டி கொடுத்தோ, கூட்டி கொடுத்தோ கொன்றுவுடுவார்கள் தேசியம் என்பது நம்மிடம்தான் உள்ளது நமது ஒற்றுமைதான். நமது தேசியம் நம் ஒற்றுமை இல்லாதமல் ஒருநாளும் ஒருவருக்கும் உதவாது இதை அறியாததால்தான் வந்தேறிகள் எல்லாம் தமிழ் தேசியம் பேசி நம்மை விலை பொருளாக்கி பெரும்லாபம் பெறுகின்றனர் இதை அறியாதவரை அடுத்த நூறு ஆண்டுகளானாலும் தமிழ் தேசியம், தமிழ் தேசியம் இந்த தமிழ் நாட்டின் மேடைகளில் கேக்கதான் போகிறது , நாமும் கைதட்டி அடிமைகளாகத்தான் வாழபோகிறோம் - வாழ்க தமிழ் தேசியம்

சீற்றம்:- அகரம் அறியாதவன்

Friday, May 29, 2015

டிராஃபிக். ராமசாமி - சமூக ஆர்வலர்


தொலைகாட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் 'சமூக ஆர்வலர்' என்ற வார்த்தைக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லாத கேடுகெட்ட பிறவிகள் (இன்று சமூக ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு அரவேக்காடக விவாதங்களில் பேசி காசு சாம்பாதிக்கும் சில பிசாசுகள்) இந்த முதியவர் 'டிராபிக்' ராமசாமியின் 'மூத்திரத்தை' வாங்கி குடிக்கலாம்.


1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம்
அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத்தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன். அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்துகாஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்) சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன். ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக்
குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.

எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும்.

அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது. ‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மாவிடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை. ‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன். நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார். ‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு. அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான்தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக்கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த
வேண்டும்போல் இருந்தது. வயதில் சிறுவனாக இருந்தாலும்,
எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால்தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப்பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமரவைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன். அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத்
திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை.

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை. 14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை
அக்கறையோடு படித்து, உரியபடிவிசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர். இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த14 வயதில் உருவானது.
.
- டிராஃபிக். ராமசாமி

Wednesday, May 20, 2015

சேவல் சண்டை, ஜல்லி கட்டுக்கு தடை தேவையா ?



சேவல் சண்டை, ஜல்லி கட்டுக்கு தடை தேவையா ?

சில கருத்துகளை நான்/ நாம் ஏற்று கொள்ளலாம்

1. கத்தி கட்டுவது தடுக்க பட வேண்டும்

2. சாராயம் போன்ற போதை பொருள் பயன் படுத்த கூடாது

இவைகள் ஏற்க கூடிய விசியங்கள் , ஆனால் சேவல் சண்டையே கூடாது என்பது சரி இல்லை
தமிழனின் பாரம்பரிய, தொன்று தொட்ட, வரலாறோடு ஒருங்கிணைத்த பண்பாடுகளை தடை செய்வது சரிஇல்லை
இது திட்டமிட்டு தமிழனின் பண்பாடையும், அவனின் கால்நடை சார்ந்த வாழ்க்கை முறையும் ஒழிபதாகும்

எடுத்துகாட்டாக. காங்கேயம் காளை என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமான எந்த மாநிலத்திலும், ஏன் ? நாட்டிலும் இல்லாத ஒரு கம்பிரமான கட்டுடல் கொண்ட இனம், அந்த இனத்தை வளர்த்து அதில் ஏறி தழுவுதல் (ஜல்லி கட்டு) என்பது தமிழனால் மட்டும் முடியும்... அப்பா சல்லி கட்டை ஒழித்தால், காங்கேயம் இனம் ஒழியும், தமிழனின் பண்பாடு, வீரம் அழியும், அது போலத்தான் கோழி சண்டையை ஒழித்தால் அசில் என்ற தமிழ் நாட்டுக்கு சொந்தமான அசில் என்ற கோழி இனம் அழியும்

இவ்வாறு தமிழனின் வாழ்வு முறையும், கலாசாரத்தையும் அழிக்க முடியும்
சரி ஜல்லி கட்டு, கோழி சண்டை தடை சரி என சொல்லும் என் சொந்தகளுக்கு என்னிடம் சில நியாயமான கேள்விகள்


1. கோவிலில் இருக்கும் யானையை பாகன் எப்படி தன் கட்டுப்பாடில் வைத்து இருக்கான் ? குத்து ஊசியால் குத்துவது இல்லையா?

2. மாட்டை தடியால் தட்டாமல் ஏர் உழ முடயுமா ?

3. கோமாரி நோயால் லட்சகணக்கான கால்நடைகள் உயிர் மாண்டபோது இந்த இயக்கங்கள்( மிருக வதைத் தடுப்புச் இயக்கங்கள்) என்ன முயச்சி எடுத்தார்கள்? எங்கே சென்றார்கள் ?

4. பணக்காரர்கள் குதிரை பந்தையம் என்ற பெயரில், குதிரையை தனது சூதாடதுக்கு பல மயில் துரதுகிரார்களே அது குற்றம் இல்லையா? அது மிருக வதைத் இல்லையா?
5. மிருக வதைத் தடுப்புச்
இயக்கங்களில் இருப்பவர்கள் யாரும் ஆடு, மாடு, கோழி என்ற எந்த மாமிசமும் சாபிடாதவர்களா? அது மிருக வதைத் இல்லையா?

6. தினம் , தினம் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு பல ஆய்ரம் மாடுகள் அடிமாடுகளாக கடத்த படுகிறதே, அது மிருக வதைத் இல்லையா? அதை தடுக்க இந்த இயக்கங்கள் என்ன செய்தன?

7. ஊஎரியல் பூங்காக்களில், பறவை, பாம்பு, சிங்கம், புலி என அணைத்து வகை கால்நடைகளையும் அடைத்து வைத்து பணம் சம்பாதிப்பது மிருக வதைத் இல்லையா? அவை விருப்ப பட்டா கூண்டில் வாழ்கின்றன ? அதை தடுக்க இந்த இயக்கங்கள் என்ன செய்தன?

இது போன்று எவலோவோ சொல்லலாம், இதெற்கெல்லாம் இந்த இயக்கங்கள் என்ன செய்தன?


விவசாயம் என்ன பணம் கொழிக்கும் தொழிலா?


சில பச்சை அட்டை கொண்ட வார, மாத இதழ்கள் நல்ல அலங்காரத்துடனும், கண்கவரும் இயற்கை சூழல் கொண்ட புகைபடத்துடன் விவசாயம் பற்றி இன்றைய இளைனர்களை தவறாக வழி நடத்துகின்றனர் அதுவும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தாராம் , வேலையை விட்டாராம் , மாதம் இலட்சம் சம்பாதிகிராராம் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவது வேதனை அளிக்கிறது


மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர் விவசாயம் செய்வது உண்மையாகலாம், ஆனால் அவர் இப்போது மென்பொருள் வேலை செய்பவராக இருக்கலாம் , ஆனால் அவர் தலைமுறை விவசாயமாக இருக்கும், அவர் செய்த தொழில் விவசாயமாக இருக்கும் , அவர் படித்தது விவசாயத்தை நம்பி இருக்கும். அதனால் அவருக்கு இயல்பாகவே விவசாயம் பற்றிய நம்பிகையும், அதனை பற்றிய அனுபவமும் இருப்பதால் இன்றைய சில தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி வெற்றி பெறமுடியும் அதுவும் எல்லா நேரங்களிலும் முடியாது, விவசாயம் என்பது இயற்கை மற்றும் மனித வாழ்வியல் முறையை சார்ந்தவை, முற்றிலுமான தொழில் சார்ந்தவை இல்லை, ஆதலால் விவசாயம் என்பது பணம் கொழிக்கும் தொழில் என்ற வார்த்தையை முதலில் தவிருங்கள்


விவசாயம் ஒரு பணம் கொழிக்கும் தொழில், பணம் கொழிக்கும் தொழில் என்று அட்டை பக்கத்தில் எழுதுவதை முதலில் தவிருங்கள், அது உங்களுக்கு ஆயர கணக்கில் ஏடுகள் விற்பதால் பணம் கொழிக்கலாம், விவசாயம் செய்பவர்களுக்கு இல்லை. விவசாயம் ஒரு உன்னதமான வாழ்கை முறை , அதை செய்து தன் குடும்பத்தை நடத்தலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம், ஆனால் லட்சத்தில் கொழிக்கமுடியாது, அப்படி விவசாயத்தில் இலட்சம் கொழிக்க வேண்டுமானால் சில நூறு ஏக்கர் வைத்திருக்கும் நாட்டாமையாக இருக்கவேண்டும், சில ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயால் முடியாது.
விவசாயம் ஒரு உன்னதமானவை, அதை நடிகைகளின் கிசு கிசு போன்று விளபரம் செய்து பணம் சம்பாதிக்காதிர்
மீண்டும் சொல்கிறேன்

விவசாயம் ஒரு பணம் கொழிக்கும் தொழில் அல்ல, அது வாழ்க்கைமுறை



Monday, May 18, 2015

காசாக்கப்படும் விவசாயின் வாழ்க்கையும், பந்தா காட்டும் பரதேசிகளும்......



விவசாயின் வாழ்கை முறை காசாக்கப்படும் பொருளாக மாறிவிட்டன. நடிகன் முதல்,மீடியா, அரசியல்வாதிகள் வரை நம் வாழ்வை காட்டி பணம் சம்பாதிக்கும் பரதேசிகள். ஏன் எல்லோரையும் குறைகூற வேண்டும் என கேக்கலாம், என் ரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சிகளை காறித்துப்பாமல் கைகூப்பியா வரவேற்கமுடியும் ?


விவசாயின் மேல் அக்கறை காட்டுகிறார்களாம், அக்கறை காட்டுபவர்கள் ஏன் விவசாயோடு களத்தில் நிற்க மறுகின்றனர், ஒரு படத்தில் வசனம்
'என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுவிடாதிர்கள்" அய்யோ புள்ளரிக்குது என்னை பற்றி பேசவும் ஒரு நடிகன் இருக்கானே, ஒரு இயக்குனர் இருக்கானே என்று, இவ்வசனம் பேசி என் விவசாயடமே சம்பாதித்த பணம் பலகோடி , எனக்கான ஆதங்கம் என் வாழ்வை பணமாக்கும் நீங்கள் எங்கள் வாழ்வில், எங்கள் போரட்டத்தில் எங்களுடன் கைகோர்த்த ஒரு நிகழ்வை கூறுங்கள் பார்போம்


அடுத்து மீடியாக்கள்(எல்லா மீடியாகளையும் குறைகூறவில்லை) பொங்கலுக்கும் வெளிமாநில முதுமுக தொப்புள் நடிகைக்கும் என்ன சம்பந்தம்? பொங்கல் தமிழனின் பாராம்பறிய ஒரு பண்டிகை, அந்நாளில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அம்மக்களை, அவர்களின் உழைப்பை ஏன் ஒளிபரப்பி அவர்களை சந்தோஷ படுத்தகூடாது இந்த மீடியாக்கள் ? கூத்தாடியின் கையில் ஒரு கரும்பு கொடுத்து பொங்கல் பற்றி பேட்டி எடுக்கின்றனர்? அவள் கரும்பை கம்பு என்கிறாள், பொங்கலை போங்கள் என்கிறாள், கோலம்போடுதலை , காலம்போடுது என்கிறாள், பெண்கள் என்பதை பேன்கள் என்கிறாள் , இதை கேட்டு அவர்களுக்கான கட்டளை நேரத்தில் அவர்களே கைதட்டி சிரித்து என் உழவனின் பண்டிகையை பணமாக்கும் பரதேசிகள்


அடுத்து நம்மை ஆளும் நம் சொந்தங்கள் அதிரகார மையம், விவசாயின் வாழ்கையை பணமாகுவதில் முதல்நிலை அடைந்தவர்கள், ஆளும்கட்சி, எதிர் கட்சி விவசாயை காப்பாதுவதில் என்னே ஒரு அக்கறை, மீதேன் எடுப்பவர்கள் ஏதோ செய்வாய் கிரகத்தில் இருந்து நடு சாமத்தில் நெல்லை மாநிலத்தில் இறங்கி நெற் பயிறுக்குள் இவர்களுக்கு தெரியாமல் ஒழிந்து கொண்டது போலவும், எல்லோரும் தூங்கிய பிறகு மீதேன் எடுத்து விட்டு மீண்டும் ஒழிந்துகொள்வது போலவும், மின் பற்றாக்குறை காரணமாக மீதேன் எடுப்பவர்களை கண்டுபிக்க முடியவில்லை என்கிற போலவும் என் மக்களை ஏமாற்றுகின்றனர், இவர்களே பலநூறு கோடி நம் விவசாயின் வாழ்கையை மீதேன் எடுப்பவனிடம் விற்று விட்ட பரதேசிகள்


எல்லா மட்டத்திலும் உள்ள பரதேசிகள் விவசாயை பரதேசியாக்கி பணம் சம்பாதிகின்றனர் பணம் தின்னும் பரதேசிகள்


கொள்ளையடிக்கும் தமிழ் கூத்தாடிகள்



தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும், உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுவிடாதிர்கள் என்ற வசனங்களே ரூ .700 கோடிக்குமேல் சம்பாத்தித்து கொடுக்கிறது, கொடுக்க போகிறது நமது தமிழக இல்லை வந்தேறி தமிழக கூத்தாடிகளுக்கு
இவர்கள் தமிழக மக்களுக்கு அல்ல தமிழக விவசாயகளுக்கு என்றுமே எதிரானவர்கள் என்பதை அவர்கள் தேர்தெடுக்கும் நாய்களின்( நாயகிகளின்) தேர்வை பொறுத்தே நாம் அறியலாம், நம் இனம், கலாசாரம், மொழி எல்லாவற்றையும் அசிங்கபடுதுவதாகவே நாய்களின்( நாயகிகளின்) பேச்சில் அல்லது தொலைக்காட்சி பேட்டிகளில் பார்க்கமுடியும்
சரி இதை எல்லாம் நான் ஏன் சொல்லவேண்டும் ?


கேரளா அரசு முல்லைபெரியார் அணையின் குறுக்கே அணையை கட்டி தமிழனுக்கு கிடைக்கவேண்டிய தண்ணியை கிடைக்காமல் வஞ்சகம் செய்யபோகிறது இதற்க்கு
"உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுவிடாதிர்கள்"
என்று வசனம் பேசி விவசாயி கஷ்டத்தை படமாக்கி பலகோடி சம்பாதித்த நாயகன் எங்கே போனான்? அணை கட்டும் அறிவுப்பு இவன் பேசிய வசனத்துக்கு அப்புறம் கூட வந்திருக்கு. சரி அதை செய்யத்தான் அரசு இருக்கு என்று சொன்னால் அப்புறம் என்ன மயி.......கு வெட்டி வசனம் பேசி எம் மக்களை ஏமாற்றுகிறாய்


அடுத்து ஒரு வசனம் பல நூறு கோடி சம்பாத்தித்து கொடுக்க வருகிறது அதுதான் இன்னொரு வந்தேரியின் வசனம்
"தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும்"
கர்நாடக அரசு தமிழக விவசாய்கள் யாரும் வாழக்கூடாது என்பதில் மிகவும் குறியாக உள்ளது.


அவர்கள் 20-25 TMC அளவுள்ள 20 அணைகளும் 40-45 TMC அளவுள்ள 5 அணைகளும் காவிரிக்கு குறுக்கே கட்டபோகின்றனர், இதற்கு "தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும்" வசனம் பேசி பலகோடி சம்பாதிக்கும் கூத்தாடி என்ன செய்யபோகிறான்?
என்ன செய்வார்கள், நம் ஏழ்மையை எப்படி பணம் பண்ணுவது என்று அடுத்த கதைக்கு தயார் ஆவார்கள், உன் கை காய்ப்பு காய்க்கும் அளவுக்கு கஷ்டப்பட்ட பணத்தை அவனிடம் கொண்டு சேர்ப்பாய், சேர்த்தாலும் பரவாயில்லை, அந்த கூத்தாடிகளுக்கு உன் செலவிலே கட் அவுடர் வைத்து, உன் செலவிலே கட் அவுடர்கு பால் ஊற்றி, பிறகு உன் செலவிலே உனக்கும் பால் ஊற்றி கொள்வாய். இந்த கொடுமையை தொலைக்காட்சி மூலம் பார்க்கும் அந்த கூத்தாடிகளுக்கு அடியில்( அசிங்கமா வருது) ஐஸ் வட்சமாரி இருக்கும்